புதுடெல்லி,
மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான 17-ந்தேதி(இன்று) அவர் இந்தியாவிற்கு வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் உடன் வருகிறார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும், அவர் டெல்லி, குஜராத், வாரணாசி உள்ளிட்ட இடங்களிலுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.