டெல்லி: இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் மீண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த புகைப்படத்தை எடுத்துக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.கொரோனா இறப்பு எண்ணிக்கையை கணக்கிட, உலக சுகாதார அமைப்பு கையாண்டுள்ள கணித முறையை, இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும், உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது” என்ற செய்தியை சுட்டிக்காட்டி அதற்கு பதிலளித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் பதிவில், “இந்தியா போன்றதொரு பரந்து விரிந்த தேசத்தில், அதன் எண்ணிலடங்கா மக்கள் தொகைக்கும் இந்த முறை பொருந்தாது” என்று தெரிவித்திருந்தது. இன்று வெளியிடப்பட்ட மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேர் கொரோனாவால் இறந்த நிலையில், நாட்டில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 5,21,751 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம், 5 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், இறந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: மோடி ஜி உண்மையை பேசுவதில்லை, மற்றவர்களை பேச விடுவதில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் இன்னும் பொய் சொல்கிறார். கொரோனா காலத்தில் அரசாங்கத்தின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள் மோடி ஜி, இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.