திருவனந்தபுரம் : விலங்குகளை விரட்ட, கேரளா வனத்துறை சார்பில், விவசாயிகளுக்கு ‘கார்பைடு கன்’ வழங்கப்படுகிறது.
கேரளாவின், மறையூர் பகுதிகளில், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள், கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையிலும், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வனத்துறை நவீன கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.’கார்பைடு கன்’ எனப்படும் இந்தக் கருவியில் வனத்துறை வழங்கும் கார்பைடு பொருளை வைத்து, துப்பாக்கி போல் சுட்டால், அதிக ஒலி எழுப்பி, வன விலங்குளை விரட்டியடிக்கிறது.
விலங்குளை விரட்ட, விவசாயிகளும், வனத்துறையினரும் பட்டாசுகளை வெடிக்கும் போது, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வன விலங்களுக்கு தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வாக, கார்பைடு கன் கருவி பயன் தருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருவனந்தபுரம் : விலங்குகளை விரட்ட, கேரளா வனத்துறை சார்பில், விவசாயிகளுக்கு ‘கார்பைடு கன்’ வழங்கப்படுகிறது.கேரளாவின், மறையூர் பகுதிகளில், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.