2-வது வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே? குஜராத்துடன் இன்று மோதல்

IPL 2022 CSK vs GT score updates: ஐபிஎல் 2022ன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணியுடன் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் 29 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன் அணியும் மோதவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப்போட்டி ​​ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரண்டு புதிய கேப்டன்களுக்கு இடையேயான புத்திசாலித்தனத்தின் சோதனையாக இருக்கும்.

ஆல்ரவுண்ட் திறமைகளுக்கு பெயர் பெற்ற ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பாக சேவையாற்றியுள்ளனர். இந்தநிலையில், இன்றைய போட்டி இருவரின் கேப்டன் திறமைக்கு சவால் விடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடர்ச்சியான முதல் 4 தோல்விகளுக்குப் பிறகு, 5ஆவது போட்டியில் தான் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளது. அதேநேரம் குஜராத் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தநிலையில், இரு அணிகளும் தங்கள் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றநிலையில், வெற்றியைத் தொடர இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றையப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே உத்தேச அணி விவரம்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.

குஜராத் உத்தேச அணி விவரம்: மேத்யூ வேட், ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாதியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.