TET Exam Tamil Nadu: டெட் தேர்வு பேப்பர் 1, பேப்பர் 2 முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

TET Exam Syllabus Download Method: ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பும் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைப்படி நடத்தப்படும் இந்த தேர்வுக்கு கல்விவியல் கல்லூரி மாணவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

அதன்பிறகு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடத்தப்படாமல் இருந்த இந்த தேர்வு நடப்பு ஆண்டு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022-ம் ஆண்டுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந் தேதியுடன் இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவுக்கு வந்ததது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வுக்காக பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்ற 2 தாள்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில, இதை எப்படி டவுண்லோடு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில், ttp://www.trb.tn.nic.in/  இந்த இணையதள முகவரியை உங்களது கம்யூட்டரில் ஓப்பன் செய்துகொள்ளவும்.

அதில் தமிழ்நாடு டீச்சர் எளிஜிப்புள் டெஸ்ட் (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) ) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அடுத்து தனியாக வரும் விண்டோவில், டீட்டைல்டு சிலபஸ் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்று ஆப்ஷன் இருக்கும். அது இரண்டையும் கிளிக் செய்து சிலபஸை டவுண்லோடு செய்துகொள்ளலாம்..

பேப்பர் 1 என்பதை கிளிக் செய்யும்போது சிலபஸ் பிடிஎஃப் பைல் ஓப்பன் ஆகும். இதை நீங்கள் டவுன்லோர்டு செய்து வைத்துக்கொள்ளலாம்.  பேப்பர் 2-க்கும் இது பொருந்தும்.

இதில் பேப்பர் 1-ல் 1 முதல் 5-ம் வகுப்புக்காக பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  சைல்டு டெலவப்மெண்ட் 30 மார்க், மொழப்பாடம் 1 30 மார்க், மொழிப்பாடம் 2 30 மார்க், கணக்கு 30 மார்க், எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ்  30 மார்க் என மொத்தம் 150 மார்க்-க்கு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த சிலபஸில் ஒவ்வொரு பாடத்திட்டமும் எந்த பக்கத்தில் தொடங்கி எந்த பக்கத்தில் முடிவடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளளது.  இதே 150 மார்க்-க்கு பேப்பர் 2 தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.