Vikram: சேது டு பொன்னியின் செல்வன்; `கலைத் தாயின் செல்வன்' நடிகர் விக்ரமின் திரைப்பயணம்!

எத்தனை படங்கள், எத்தனை கதாபாத்திரங்கள்…! தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் தந்து பார்வையாளர்களை அசர வைக்கும் விக்ரமுக்கு இன்று பிறந்த நாள்…!

1990 `என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்குள் நுழைந்தார் விக்ரம். தனது ஆரம்ப காலங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறைகளில் பணியாற்றியவர்.

ஆரம்ப காலங்களில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பாலாவின் ‘சேது’ அவரை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று பல விருதுகளை பெற்றுத்தந்தது.

ஒரு ஹீரோவாக இருந்தாலும் அஜித்தின் குரலாக அமராவதியிலும், பிரபுதேவாவின் குரலாக காதலன் போன்ற படங்களிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றியவர்.

‘சேது’ படத்தில் காண்போரைக் கலங்கடித்த விக்ரம்,அதன்பின் தரணி இயக்கிய ‘தில்’ படத்தில் அதற்கு நேரெதிராக மாஸ் காமித்தார். அதன் பின் ‘காசி’ படத்தில் கண் தெரியாதவராக நடித்து ‘யார் சாமி இவன்’ என்று திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

விஜய் – விக்ரம்

ரஜினி-கமல், அஜித்- விஜய் என்று அன்றைய காலங்கள் செல்ல, தன் சக நடிகருடன் எந்த போட்டியும் இல்லை ‘என் வழி தனி வழி’ என்று நடைபோட்டவர் விக்ரம்.

ஆர்டிஸ்டிக் பார்மெட்டில் மட்டுமில்லை கமர்சியல் படத்திலும் நான் ராஜா என அதன்பின் அவர் நடித்த சாமுராய், தூள், ஜெமினி, சாமி படங்கள் அவரை சினிமாவின் உச்சத்தில் அமர்த்தியது.

பின்னர் 2003-ல் ‘மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்து ‘பிதாமகன்’ படத்தில் வசனமே இல்லாமல் தன் நடிப்பால் அசர வைத்தார். இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

விக்ரமின் ஸ்பெசலே வெரைட்டியான படங்கள் தருவது தான். அவர் ஜெமினி, சாமி போன்ற படங்களில் கமர்சியல் மாஸ் காட்டவும் செய்வார், ‘காசி’, பிதாமகன் போன்ற படங்களில் நடிப்பால் அசர வைத்து காண்போரை கலங்கடிக்கவும் செய்வார்.

விக்ரம்

இப்படி வெரைட்டியான படங்கள் ஹீரோவாக அவரது மார்க்கெட்டை பாதித்ததில்லை மாறாக சினிமாவின் உச்சத்தில் அமர்த்தியது.

உயிரைக் கொடுத்து நடிக்க யார் இருக்கிறார் என்று கேட்டால் நான் இருக்கிறேன் என வரும் டெடிகேஷன் உள்ள நடிகர் விக்ரம். இயக்குநர் ஷங்கரின் ‘அந்நியன்’, ‘ஐ’ படத்திற்கு அவர் கொடுத்த டெடிகேஷன் அனைவரையும் வியக்க வைத்தது.

மணிரத்னம் இயக்கத்தில் ‘ராவணன்’ மீண்டும் அவரின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘கரிகாலச் சோழன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம்

அசாத்திய கதாபாத்திரங்களிலிருந்து விலகி குழந்தைபோல ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்து அசத்தினார். தந்தையாக, கண்தெரியாதவராக, மாஸ் ஹீரோவாக, கிளாஸ் நடிகராக, ரெமோவாக எந்த கதாபாத்திரத்திலும் எந்த லுக்கில் அப்படியா பொருந்தி விடுவார்.

அந்நியன் படத்தில் மூன்று கதராபாத்திரத்தில் நடித்த விக்ரம் அண்மையில் வெளியான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மகான்’ படத்தில் ஒரே காதாபாத்திரத்தில் 30,40,50 வயதின் மூன்று வெறியேஷன்களில் அசால்டாக நடித்தார்.

இன்னும் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன், ‘துருவ நட்சத்திரம்’, என வரும் படங்களில் பார்வையாளர்களை எப்படி பிரமிக்க வைக்க போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படத்திற்கு படம் பல வெரைட்டி, எந்த காதாபாத்திரமாக இருந்தாலும் அதை கண்முன் கொண்டு வரும் டெடிகேஷன், அசாத்திய நடிப்பு என திரைத்துறையில் வலம் வரும் விக்ரம் உண்மையில் ‘கலைத்தாயின் செல்வன்’ தான். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.