அதிபர் கோத்தபய உடனே பதவி விலகவேண்டும்- இலங்கையில் வலுக்கும் மக்கள் போராட்டம்

கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்வால் கடும் அவதிப்படும் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய அலுவலகத்திற்கு வெளியே தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இன்றும் அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் கோத்தபய உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
எதிர்ப்பாளர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று கோத்தபய அறிவித்ததால் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக முன்னணி பல்கலைக்கழகமான என்யுஎஸ் தெரிவித்துள்ளது. மாணவர்கள், விவசாயிகள் மற்றும் நீதித்துறையினர் அனைவரும் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு “இனி ராஜபக்சேக்கள் வேண்டாம்” என்று முழக்கமிட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.