அழ வைகுந்தபுரமலு பட வெற்றிக்கு பிறகு நடிகை
பூஜா ஹெக்டே
அனைவரும் விரும்பும் நடிகையாக மாறிவிட்டார்.சமீபத்தில் வெளியான பிரபாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ராதே
ஷ்யாம்
படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. அதனையடுத்து விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்த பீஸ்ட் படம் சிறந்த வெற்றியை பெற்றது.
தற்போது இவர்
எஃப்3
படத்தில் ஒரு பாடலுக்கு சோலோ டான்ஸ் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீ
வெங்கடேஸ்வரா
கிரியேஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிப்புடி எழுதி மற்றும்
நடிகை மீனா மீண்டும் கர்ப்பமா? தீயாய் பரவும் வீடியோ!
வெங்கடேஷ் டகுபதி மற்றும் வருண் தேஜ் உடன் இவர் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது, பூஜா ஹெக்டே நடமாடுவதாக கூறப்படும் இந்த பாடல் நிச்சயம் அனைத்து பாடல்களின் வெற்றிகளையும் தகர்த்தெறியும் என்று கூறப்படுகிறது. முன்னணி நடிகையான
சமந்தா
புஷ்பா படத்தில் நடமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது, அதைவிட பூஜா ஹெக்டே நடனமாடும் இந்த பாடல் அதிக பிரபலமாகும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பீஸ்ட் படத்தில் அமைந்துள்ள ‘
அரபிக்குத்து
‘ பாடல் மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரண்டு பாடல்களில் இவர் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது, இதில் இவரது நடன அசைவுகளை பார்த்த பிறகு இவரை ‘எஃப்3’ படத்தில் நடனமாட படக்குழு அணுகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு சோலோ டான்ஸ் ஆடுவது இவருக்கு முதல் தடவியில்லை, ஏற்கனவே ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ‘
ரங்கஸ்தலம்
‘ படத்தில் வெளியான ‘ஜீகேலு ராணி’ என்கிற பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
‘எஃப்3’ படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவரது
ட்விட்டர்
பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அந்த புகைப்படங்களில் பின்னனியில் நடிகை பூஜா ஹெக்டே தென்படுகிறார். மேலும் அந்த புகைப்படங்களுடன் அவர், ‘எஃப்3’ படத்தின் சிறப்பான பாடலில் யார் இணைகிறார் என்று யோசியுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த படத்தில் வெங்கடேஷ் டகுபதி, வருண் தேஜ், மெஹரீன் கவூர் மற்றும் தமன்னா போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!