நடிகை
நந்திதா
ஸ்வேதா, ரசிர்களுடன் கலந்துரையாடிய போது, வரம்பு மீறிய ரசிகர் ஒருவர், நந்திதாவின் புகைப்படத்தை பதிவிட்டு ஏடாகூட கேள்வி கேட்டுள்ளார்.நடிகை நந்திதா தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக நிகழ்ந்து வருகிறார்.
ஐபிசி 376, இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இயக்குனர்
பா.ரஞ்சித்
இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும்.
நடிகை மீனா மீண்டும் கர்ப்பமா? தீயாய் பரவும் வீடியோ!
அந்த திரைப்படத்தை அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்ற வசனம் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.
இதையடுத்து, எதிர்நீச்சல், தளபதியின்
புலி
படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது நந்திதாவின் நடிப்பு இருந்தது.
செல்வராகவன்
இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நந்திதா. அந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நந்திதா, ரசிர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். சமீபத்தில் ஒரு ரசிகர் , வயிற்றில் என்ன தழும்பு என ஏடாகூடமாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கும் பதிலளித்துள்ள நந்திதா, பலரும் என் வயிற்றில் இருக்கும் தழும்பு பற்றியே கேள்வி கேட்கின்றனர்.
நான், Dhee என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதால் தொடர்ந்து, அமர்ந்து இருந்தேன். அப்போது நான் அணிந்திருந்த பாவாடையால் வந்த தழும்பு தான் அது. இதற்காக ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!