வாஷிங்டன்,
உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தங்களின் சொந்த ஆராய்ச்சிக்காவும், வணிக ரீதியிலும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.13 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோளை வெற்றிகராமாக நிலைநிறுத்தியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.