அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வருகை தரலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்ததற்கான உறுதியான ஆதாரங்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி,
விளாடிமிர் புடினின் உண்மை முகம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் அம்பலப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றே தாம் நம்புவதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைன் வருகை தொடர்பில் அவர் தாம் முடிவெடுக்க வேண்டும் எனவும், போர் சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் கருத்தில் கொள்ளவேண்டும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜோ பைடன் அமெரிக்க தலைவர் எனபதால், உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்தை அவர் கண்கூடாக பார்க்க வேண்டும் என தாம் விரும்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பில் ஜோ பைடன் தமது அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும், அவர்கள் முடிவு அறிவிப்பதை அடுத்தே ஜோ பைடன் உக்ரைன் செல்வது உறுதி செய்யப்படும் என தெரியவந்துள்ளது.