இணையதளம் மெதுவாக செயல்படுவதாக விண்ணப்பதாரர்கள் புகார் எழுப்பிய நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு, தாள்-1 மற்றும் தாள் 2 (TET) எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 14 ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலரும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வந்தனர்.
ஆனால் இணையதளம் போதுமான வேகத்துடன் செயல்படமல் மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும் இதனால் விண்ணப்பிக்க இயலவில்லை என்றும் விண்ணப்பதாரர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 18 ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.