ஆந்திராவில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலவரம்- 20 பேர் படுகாயம்

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலூர் ஹொலகுண்டா, இரலகட்டா ஆகிய இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது.

அப்போது ஊர்வலத்தின் மீது ஒரு சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஊர்வலத்தில் சென்றவர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். ஊர்வலத்தின் மீது கற்கள் வீசியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15 பேர் லேசான காயமடைந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வீச்சு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகத்தின் பெயரில் 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க கர்னூல் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.