நியூடெல்லி: இந்திய செல்போன் சந்தையில் வரும் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது ரெட்மி 10A (Redmi 10A) ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இது குறித்த தகவல் அமேசான் மற்றும் எம்.ஐ நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Redmi 10A போன், தற்போது சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதே மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ரெட்மி 10 போனை காட்டிலும் மலிவான விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. இருந்தாலும் இதுவரை விலை குறித்த விவரத்தை ரெட்மி உறுதிப்படுத்தவில்லை.
சிறப்பம்சங்கள் என்ன? ரெட்மி 10A (Redmi 10A) ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 புராசஸர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 5000 mAh பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 4ஜி இணைப்பு வசதி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
மேலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்தியாவில் ரெட்மி 10 போனின் இரண்டு வேரியண்டுகள் ரூ.10,999 மற்றும் ரூ.12,999 என விற்பனையாகி வருகின்றன. ரெட்மி 10A போன் இந்த விலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link