இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு!

இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடமாக ஊழியர்களின் தொடர் வெளியேற்றத்தால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்துவது மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம், பதவி உயர்வு, போனஸ் ஆகியவற்றைக் கொடுத்து வருகிறது. ஆனாலும் ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் காரணத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

ஹெச்1பி விசாக்களை மொத்தமாக சுருட்டிய இந்தியர்கள்.. ஐடி ஊழியர்கள் தான் டாப்பு..!

டிசிஎஸ், இன்போசிஸ்

டிசிஎஸ், இன்போசிஸ்

நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஐடி துறையில் இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றம் அடுத்தச் சில காலாண்டுகளுக்குத் தொடரும் என வெளிப்படையாக அறிவித்துள்ளது.

ஆப்ரேஷன்ஸ் பாதிப்பு

ஆப்ரேஷன்ஸ் பாதிப்பு

இப்படி ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் காரணத்தால் ஐடி நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் அதாவது பணிகளைக் கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் நிறுவனங்களின் செலவுகளும் அதிகரித்து வருகிறது.

 டிஜிட்டல் மற்றும் ஐடி சேவை
 

டிஜிட்டல் மற்றும் ஐடி சேவை

கொரோனா தொற்றுக்குப் பின்பு பெரும்பாலான நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் ஐடி சேவைகளில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கிய காரணத்தால் குறுகிய காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான ப்ராஜெக்ட்-ஐ பெற்றது.

 ஊழியர்கள் வெளியேற்ற அளவு

ஊழியர்கள் வெளியேற்ற அளவு

இந்த ப்ராஜெக்ட்-ஐ வேகமாக முடிக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் சக ஐடி சேவை நிறுவனத்தில் இருந்து ஊழியர்களைக் கைப்பற்றத் துவங்கினர். சுமார் 2 வருடமாக இந்தப் பிரச்சனை இருக்கும் நிலையில், கடந்த 15 வருடத்தில் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்றத்தை தற்போது சந்தித்துள்ளது.

ரோலர்கோஸ்டர் நிலை

ரோலர்கோஸ்டர் நிலை

மேலும் கடந்த 20 வருடத்தில் இந்திய ஐடி துறை ஒரு ரோலர்கோஸ்டர் நிலையை அடைந்துள்ளது, எப்படித் தெரியுமா.. 2000ஆம் ஆண்டில் டாட்காம் உச்சம், Y2K வெற்றி ஆகியவற்றின் மூலம் டெக் துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்பு உருவானது, 2008ஆம் நிதியியல் நெருக்கடிக் காலத்தில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்து மந்தமானது. தற்போது மீண்டும் டெக்னாலஜிக்கான டிமாண்ட் அதிகரித்து லட்ச கணக்கில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளது.

1.85 லட்சம் பிரஷ்ஷர்ஸ்

1.85 லட்சம் பிரஷ்ஷர்ஸ்

இந்தியாவில் இருக்கும் ஐடி ஊழியர்கள் தட்டுப்பாட்டைத் தீர்க்க நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் எப்போதும் இல்லாத வகையில், 2022ஆம் நிதியாண்டில் மட்டும் 1.85 லட்சம் பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இதில் டிசிஎஸ் மட்டும் 1 லட்சம் ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

லாபத்தில் பாதிப்பு

லாபத்தில் பாதிப்பு

அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்றம், தொடர்ந்து அதிகப்படியான சம்பள உயர்வு, வெளியேறிய ஊழியர்களுக்கு இணையான ஊழியர்கள் நியமனம், சப் காண்டிராக்ட் செலவுகள் உயர்வு ஆகியவை ஐடி நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்து வருகிறது.

 இந்திய ஐடி நிறுவனங்களின் நெருக்கடி

இந்திய ஐடி நிறுவனங்களின் நெருக்கடி

இந்திய ஐடி நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் ஐடி சேவை அளிக்கும் காரணத்தால் மட்டுமே அதிகப்படியான ப்ராஜெக்ட்களை வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இந்நிலையில் செலவுகளை அதிகரித்துள்ளதால், கட்டணத்தை உயர்த்தினால் புதிய வர்த்தகத்தின் வருகை குறையும். இது நீண்ட கால வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்படும்.

மார்ச் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டு முடிவுகள்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் மாட்டிக் கொண்டு இருக்கும் காரணத்தால் தான் மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு ஐடி நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian IT companies: Attrition trend may continue for next 2 quaters

Indian IT companies: Attrition trend may continue for next 2 quaters இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு..!

Story first published: Monday, April 18, 2022, 13:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.