இந்திய ராணுவத்தின் தளபதியாக உள்ள முகுந்த் நரவானேவின் பதவி காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.
இதனையடுத்து, நமது ராணுவத்தின் புதிய தளபதியாக
மனோஜ் பாண்டே
நியமிக்கப்பட்டுள்ளார். மே 1 ஆம் தேதி அவர் ராணுவ தளபதியாக பதவியேற்று கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக (1982 முதல்) ராணுவத்தில் பணியாற்றி வரும் மனோஜ் பாண்டே, பொறியாளர்ககள் படைப்பிரிவில் இருந்து ராணுவத்தில் தமது பயணத்தை தொடங்கினார்.
6
அந்தமான் நிக்கோபர் பிரிவின் கமான்டராக இருந்துள்ளார். பல்வேறு எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த மனோஜ், தற்போது இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.தற்போது இவர் தளபதியாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பொறியாளர் என்ற பெருமையை மனோஜ் பாண்டே பெறுகிறார்.