இந்திய ராணுவத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவது குறித்து ராணுவ தலைமை தளபதி நரவானே தலைமையிலான மாநாட்டில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
எல்லையோரங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 62 கண்டோன்மெண்ட்கள் மற்றும் 237 முகாம்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வளிமண்டலத்தில் கார்பன் வாயு உமிழ்வை குறைக்கும் முயற்சியாக, ராணுவத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்தது குறித்து அன்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. பதற்றமான எல்லை பகுதிகள், கரடு முரடான நிலப்பரப்பு, மோசமான வானிலை சூழலில் மின்சார வாகனங்களின் செயல்பாடு குறித்து பரிசீலிக்கப்பட்டது.
மேலும், அவற்றை ரீசார்ஜ் செய்ய தேவைப்படும் நேரம், அவற்றின் மைலேஜ், ரீசார்ஜ் நிலையங்களுக்கான உள்கட்டமைப்பு, விலை போன்ற அம்சங்களும் பெரும் சவலாக உள்ளது.
இருந்தபோதும், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவில் அமைதியான பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களில் படிப்படியாக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.