இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர்  டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மீடும்  வரும் 21-ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததால், முடக்கப்பட்ட  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு  ரூ.50 கோடி பேரம் பேசி லட்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக புரோகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.2 கோடி முன்பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக டிடிவி தினகரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது டிடிவி ஜாமினில்  வெளியே உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திராவின் வீடு உள்பட பல இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை செய்து ஏராளமான கார்கள் மற்றும் சொத்துக்களை முடக்கினர். மேலும் அவருடன் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்  டிடிவி.தினகரன் முன் பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டிடிவி.தினகரனை விசாரணைக்கு வருமாக கடந்த வாரம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, கடந்த 12-ம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மீண்டும்  வரும் 21-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன்அனுப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.