மூன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 24 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டு;ளளார்.
உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் பதவி ரோஹண திஸாநாயக்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆவார்.
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை,
வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆவார்.
நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாவலி இராஜாங்க அமைச்சராக சிறிபால கம்லத்தும்,
நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக அனுராத ஜயரத்னவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சராக சிசிர ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பிரசன்ன ரணவீர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சு பொறுப்பும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சு பொறுப்பும் டி.வி.சானகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை இராஜாங்க அமைச்சர் பதவிக்கு டி.வி.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராமிய பொருளாதார, பயிர்ச் செய்கை மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வர்த்தக இராஜாங்க அமைச்சராக அசோக பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக ஏ.அரவிந்தகுமார் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கலாசார மற்றும் அரங்குக்கலை இராஜாங்க அமைச்சராக திருமதி கீதா குமாரசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சேவைகள் விற்பனை ஊக்குவிப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக குணபால ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கபில நுவன் அத்துக்கோரள சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சுகாதார இராஜாங்க அமைச்சராக டொக்டர் கயாஷான் நவநந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்விச் சேவைகள் மற்றும் சீர்திருத்த இராஜாங்க அமைச்சராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி திருமதி டயானா கமகேவுக்கும், கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் பதவி திருமதி சீதா அரம்பேபொலவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
துறைமுக மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராக விஜித் பேருகொட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.