சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் 4.8% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
ஜிடிபி விகிதமானது வளர்ச்சி கண்டிருந்தாலும் சீனா அரசின் இலக்கினை எட்டவில்லை எனலாம்.
ஒரு புறம் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் சீனாவில், இந்தளவு வளர்ச்சி உள்ளதே ஆறுதலான விஷயமாக பார்க்கப்பட்டாலும், இனி வரும் காலாண்டுகளில் வளர்ச்சி விகிதமானது இன்னும் மோசமாகலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.
முதல் நாளே 1400 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..!
சீனாவில் லாக்டவுன்
இன்றும் சீனாவின் பல முக்கிய நகரங்களில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் சாலைகள், நிறுவனங்கள் தங்களது உற்பத்தியினை நிறுத்தியுள்ளன. பல நிறுவனங்கள் தங்களது சேவையினையும் நிறுத்தி வைத்துள்ளன. இது சீனாவின் வளர்ச்சியில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி பாதிப்பு
குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காயும் கூட லாக்டவுனால் அடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் இருந்தே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் சீனாவின் வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் ஒரளவு வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் சீனாவின் மக்கள் வங்கி வார இறுதியில் பெரும்பாலான வங்கிகளுக்கான RRR விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் நடவடிக்கையினை தொடங்கியுள்ளது.
எதிர்பார்ப்பினை விட குறைவு
இந்த நடவடிக்கையானது பல பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்தை விட குறைவாகவே உள்ளது. 2022ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் 4.8% அளவுக்கு மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது.
பொருளாதார காரணிகள்
சீனாவின் நியூஸ் ஏஜென்ஸி ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அங்கு பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டும் குறிகாட்டிகளான நுகர்வு, வேலை, முதலீடு, தொழில் துறை உற்பத்தி என பலவும் முடங்கியுள்ளது. இது கொரோனாவின் காரணமாக இந்த குறிகாட்டிகளில் அழுத்தம் காணப்படுகின்றது. மேலும் இதனை இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக உக்ரைன் போரும் உள்ளது. இதற்கிடையில் தான் பொருளாதாரம் சரிவு பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.
சில்லறை விற்பனை சரிவு
சீனாவின் சில்லறை விற்பனை விகிதமானது கடந்த மார்ச் மாதத்தில் 3.5% குறைந்துள்ளது. இது ஜூலை 2020க்கு பிறகு முதல் சரிவு என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. எனினும் அதே நேரம் தொழிற்சாலைகளின் உற்பத்தியானது 5% அதிகரித்துள்ளது. எனினும் முதலீடுகள் விகிதம் 9.3% சரிவினைக் கண்டுள்ளது.
China’s first quarter GDP comes in at 4.8% amid impact of lock down
China’s first quarter GDP comes in at 4.8% amid impact of lock down/இலக்கினை கோட்டை விட்ட சீனா.. ஜி ஜின்பிங்கிற்கு அதிகரிக்கும் நெருக்கடி..!