இளையராஜாவை அவமானப்படுத்துவதா? களத்தில் இறங்கிய டெல்லி பாஜக

சமூகவலைதளங்களில் இளையராஜாவின் பாடல்கள், இசை ஆகியவை அதிகமாக புகழப்படுவதும், அவர் அவ்வப்போது தெரிவிக்கும் சில கருத்துகள் மிக அதிகமாக விமர்சிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு அவர் தெரிவித்திருந்த கருத்தும், அதற்கு எழுந்த காட்டமான விமர்சனங்களும் கடந்த சில நாள்களாக இணையவெளி எங்கும் ஆக்கிரமித்துள்ளன.

புளுக்ராப்ட் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள
அம்பேத்கர்
அன்ட்
மோடி
என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையாராஜா பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

“தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பு. சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது.

அம்பேத்கரும், நரேந்திர மோடியும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. எதிர்ப்புகள் வந்தாலும் தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று
இளையராஜா
கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக
பாஜக
தேசிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாகபேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கின்றன” என
ஜே.பி.நட்டா
கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.