உக்ரைன் போரால் ஐந்தில் ஒருவர் பட்டினியில் வீழும் அபாயம் – ஐநா எச்சரிக்கை!

உக்ரைன் போர் எதிரொலியாக உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையிலும், பட்டினியிலும் தவிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

உக்‍ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது வாரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு பகுதியில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ரஷ்யாவுக்‍கு எதிராக உக்‍ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அமெரிக்‍கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ராணுவ தளவாடங்களுடன், உக்‍ரைன் வீரர்கள் எதிர் தாக்‍குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர்
அந்தோனியோ குத்தேரசு
தெரிவித்ததாவது:

உக்ரைனில் போர் நடந்துக் கொண்டிருந்தாலும் அது உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. உலகின் கோதுமை மற்றும் பார்லி தேவையில் 30 சதவீகிதத்தையும், சோள தேவையில் 20 சதவீகிதத்தையும், சூரியகாந்தி எண்ணெயில் 50 சதவீகிதத்தையும் உக்ரைனும், ரஷ்யாவும் மட்டுமே பூர்த்தி செய்து வந்தது. ஆனால் அது இப்போது தடைபட்டிருக்கிறது.

கருணை காட்டாத கனமழை – பலி எண்ணிக்கை 443 ஆக உயர்வு!

கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், எரிவாயு, உரங்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் 170 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் பணக்காரர்கள் சொத்து மதிப்பு மேலும் பெருகி, ஏழைகள் மேலும் வறுமையில் வீழ்வதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.