உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்களுடன் இணைய உள்ள சிரியா வீரர்கள்

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது., ஆனால் இதுவரை எந்த முடிவும் இல்லாமல் தொடர்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது.

ரஷ்யா மரியுபோலை விரைவில் கைப்பற்ற விரும்புவதற்கான முக்கிய காரணம் இதன் மூலம் கிரிமியாவிற்கான ஒரு நில நடைபாதை ரஷ்யாவிற்கு கிடைக்கும் என்பது தான். மரியுபோலில் உக்ரேனியப் படைகளைத் தோற்கடித்து கைப்பற்றினால், அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் டான்பாஸ் நோக்கி நகர முடியும். ரஷ்யா 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன

இந்நிலையில், IS பயங்கரவாத அமைப்புக்கு எதிராகப் போரிட்ட சிரியப் படை வீரர்கள் உக்ரைனில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட ஒப்ப்ந்தம் ஒன்று கையெழுத்திடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் சிரியாவில் போரிட்ட 5வது பிரிவு மற்றும் குத்ஸ் படையணியைச் சேர்ந்த வீரர்கள், முன்னாள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த போராளிகளும் அடங்குவர். அவர்களில் பிரிகேடியர் ஜெனரல் சுஹைல் அல்-ஹசனின் ”புலிப் படை” என்ற பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அல்-ஹசன் 2017ம் ஆண்டு சிரியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களால் பாராட்டப்பட்டார். நாட்டின் உள்நாட்டுப் போரில் போராளிகளை தோற்கடிப்பதில் அல்-ஹசன் முக்கிய பங்கு வகித்தார்.

மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், சிரியாவைச் சேர்ந்த சுமார் 40,000 பேர் ரஷ்யாவில் போர்ப் பயிற்சி பெற பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.