உண்மை தெரிந்து தான் விஜய் விஷயத்தில் இப்படி முடிவெடுத்துட்டாரா பூஜா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்,
பூஜா ஹெக்டே
, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த
பீஸ்ட்
படம் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

படம் பார்த்த விஜய் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். இது பீஸ்ட் இல்லை வேஸ்ட் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.

விஜய் எனும் மாஸ் ஹீரோவை சொதப்பலான கதையில் நடிக்க வைத்து இப்படி பண்ணிட்டீங்களே என தளபதி ரசிகர்கள் நெல்சனை விளாசினார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள் ரசிகர்கள். பீஸ்ட்டை அடுத்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

Vijay:விஜய்க்கு ரொம்ப பெரிய மனசு: குவியும் பாராட்டு
தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தை தற்போதைக்கு
தளபதி 66
என்று அழைக்கிறார்கள். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

முன்னதாக பூஜா ஹெக்டேவை தான் தளபதி 66 படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால், விஜய்யுடன் சேர்ந்து மீண்டும் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் பூஜா.

அவர் டேட்ஸ் இல்லாமல் நடிக்க முடியாது என்று சொல்ல, பீஸ்ட் படத்தின் முடிவை ஏற்கனவே தெரிந்து தான் மீண்டும் விஜய் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.