லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலியின் நசிராபாத் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கிராமத்தை நோக்கி ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அதில் அமேதி பகுதியைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.
கவுரிகஞ்ச் பகுதி அருகே எதிரே வந்த லாரியுடன் ஜீப் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர்கள் கல்லூ, அவரது மகன் சவுரப், கிருஷ்ணகுமார் சிங், ஷிவ் மிலன், ரவி திவாரி மற்றும் திரிவேணி பிரசாத் என தெரிய வந்தது.
இதையும் படியுங்கள்…கர்நாடகத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் – ஜே.பி.நட்டா