எம்எல்எம் மோசடி: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

திண்டுக்கல்: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. எம்எல்எம் மோடி காரணமாக  திண்டுக்கல்லில்  உளள  ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டடம், நிலம், உபகரணங்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளது.

எம்எல்எம் எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டி சிஸ்டம் மூலம் இளையசமுதாயத்தினர் முதல் ஓய்வுபெற்ற முதியோர்களை வரை பலரை தனது கைகளுக்குள் வைத்து, பல்வேறு மோசடி திட்டங்களை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது ஆம்வே நிறுவனம். மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் முதல் அனைத்து வகையான பொருட்களையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்து கல்லா கட்டி வந்தது. இதற்காக அப்பாவி இளைஞர்களை கமிஷன் பெயரில் தனவசப்படுத்தி தனது வருமான உயத்திக்கொண்டது.

எம்எல்எம் திட்டத்தின்படி,  ஒருவர், தனக்க  கீழ் செயல்பட ஆறு நபர்களைக் கொண்டு வர இயலும் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆறு நபர்களும் அவர்களுக்குக் கீழ் ஒவ்வொருவரும் ஆறு நபர்களை இணைத்து விடுகின்றார்கள் எனில் உங்களுக்குக் கீழ் சுமார் 40 நபர்கள் இருப்பார்கள். அந்த 40 நபர்களும் ஒவ்வொரு மாதமும் 1,000 டாலர் அளவிற்குப் பொருட்களை விற்றுவிட்டால், மிக விரைவாக உங்களின் வருவாய் அதிகரிக்கும் என்று கூறி இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தனது சிறகை விரித்து வசூலை வாரிக்கொண்டிருக்கிறது. ஆனால், பணியாளர்களில் 54 சதவகிதம் பேருக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்று புகார்கள் கூறப்பட்டுள்ளது

இந்த நிறுவனத்தின் மீதான புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை, அம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அதிர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆம்வே இந்தயா நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை திண்டுக்கல் பகுதியில் உள்ள நிலையில், அந்த தொழிற்சாலை மற்றும் ஆம்வே நிறுவன வங்கி கணக்குகள், பல இடங்களில் உள்ள நிலங்கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை முடக்கியுள்ள மொத்த சொத்தின் மதிப்பு ரூ.757.77 கோடி என்றும், இதில் அந்நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.412 கோடி மதிப்பிலானது மற்றும் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.368 கோடி மதிப்புள்ள வங்கிகணக்குகள், அந்நிறுவனத்துக்கு சொந்தமான 38 வங்கி கணக்குகள் போன்றவற்றை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.