இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தடையானது எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அத்துடன் மே இரண்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாரும் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஏற்கனவே அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இலங்கையைவிட்டு வெளியேறத் தடை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு