Tamilnadu BJP Khushboo Press Meet Update : சமீபத்தில் வெளியான அம்பேத்கர் அண்ட் மோடி என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியின் செயல்களை பார்த்து அம்பேத்கர் பெருமைகொள்வார் என்றும், அம்பேத்கரின் லட்சியங்களை பிரதமர் மோடி தனது திட்டங்கள் மூலம் நிறைவேற்றி வருகிறார். முத்தலாக் தடைச்சட்டம் போன்ற பல சட்டங்கள் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிரான பல கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகினறனர்.
இந்நிலையில், பாஜக நிறுவன தினமான இன்று தூய்மை இந்திய திட்டத் வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை பட்டிணப்பாக்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்துள்ள பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கூறுகையில்,
ஒரு புகைப்படம் பதிவிட்டதற்காக இடதுசாரி சிந்தனையாளர்கள் கருத்து சுதந்திரத்திற்காக பேசிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் என்றால் இளையராஜா கூறியது கருத்துச்சுதந்திரம் இல்லையா என்று கேட்டுள்ளார். மேலும், ஒரு கருத்தை இளையராஜா வெளிப்படையாக சொல்லும்போது அதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கருத்துச்சுதந்திரம் இல்லை என்று சொல்கிறவர்கள் உங்களுக்கு பேசுவதற்கும், உங்களது கருத்தை வெளிப்படுத்துவதற்கும் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வைத்திருக்கிறோம். அப்போ இந்த விசயத்திலும் கருத்துச்சுதந்திரம் எந்த அளவிற்கு நமது சமுதாயத்தில் நமது நாட்டில் பிரதமர் மோடி அவர்கள் இருக்கும்போது எந்த அளவிற்கு கருத்து சுதந்திரம் இருக்கு என்று எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் இதனால் கண்டிப்பாக கருத்து சுந்திரம் இருக்கிறது. இது முழுவதும் இளையராஜா அவர்களின் கருத்து அதை நாங்கள் வரவேற்கிறோம் அவ்வளவுதான் அவர் உண்மைகளை மட்டுதான் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மேலி் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், தமிழக அரசின் நிர்வாகத்தில் மாசு ஏற்பட்டுள்ளது. அதை சரியான முறையில் சாரியனா நபரை வைத்து சரியான நேரத்தில் தமிழக மக்கள் தூய்மைபடுத்துவார்கள். ராமேஷ்வரத்தில் அனுமன் சிலை அமைப்போம் என்ற பிரதமர் மோடியின் கருத்தை தமிழக பாஜக வரவேற்கிறது. மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து தமிழக அரசும் இத்திட்டத்தை வரவேற்க வேண்டும். அனுமன்தான் நாட்டின் பாதுகாவலர் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“