ராகுல்காந்திக்கு கட்சியை வழிநடத்த தெரியவில்லை. அதற்கான தகுதியும் அவரிடம் இல்லை என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பி.ஜே.குரியன் தெரிவிக்கையில், “கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும் தலைவர் பதவியை விட்டு ராகுல்காந்தி ஓடினார். ஆனால் இன்னமும் அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்துக் கொண்டு இருப்பது நல்லதல்ல.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வலுவான தலைவர் தேவை. காந்தி குடும்பத்தில் இருந்துதான் அந்த தலைவர் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ராகுல்காந்திக்கு கட்சியை வழிநடத்த தெரியவில்லை. அதற்கான தகுதியும் அவரிடம் இல்லை. ஆனால், மற்றவர்களையும் தலைவர் பதவி ஏற்க ராகுல்காந்தி விடப்போவதில்லை.
ராகுல்காந்தி ஒரு முடிவு எடுக்கும்போது, மூத்த தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை. அனுபவம் இல்லாதவர்களை கருத்துக்களை கேட்டு அவர் எடுக்கும் அனைத்தும் தவறாக முடிகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் என்ற கப்பலில் ஓட்டை விழுந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது” என்று அந்த பெட்டியில் பி.ஜே.குரியன் தெரிவித்தார்.