குட் நியூஸ்.. சென்னையை தேடி வரும் டெக் நிறுவனங்கள்..!!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வருகிறது.

இதோடு பிற மாநிலங்களில் இருந்தும் பல நிறுவனங்கள் சென்னைக்குத் தனது வர்த்தகத்தை மாற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முன்னணி நகரமாகச் சென்னை உயர்ந்துள்ளது.

இலக்கை கோட்டை விட்ட சீனா.. ஜி ஜின்பிங்கிற்கு அதிகரிக்கும் நெருக்கடி..!

சென்னை

சென்னை

டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் தனது வர்த்தகத்தைச் சென்னையில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அலுவலகத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது என ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனமான CBRE சௌத் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

23 லட்சம் சதுரடி

23 லட்சம் சதுரடி

CBRE இந்திய நிறுவனத்தின் ஆய்வுகள் படி மார்ச் 31, 2022 உடன் முடிந்த காலாண்டில் சென்னையில் மட்டும் புதிய அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தம் அளவீடு 23 லட்சம் சதுரடிக்கு செய்யப்பட்டு உள்ளது.

ஆதிக்கம்
 

ஆதிக்கம்

இதில் 34 சதவீத அலுவலக இடத்தை டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. 13 சதவீத இடத்தை வங்கியியல், நிதியியல் சேவை மற்றும் இன்சூரன்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.

நீண்ட காலத் திட்டம்

நீண்ட காலத் திட்டம்

சென்னையில் புதிய அலுவலகத்தைத் துவங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அமைத்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் இந்த லாக்டவுன் காலத்தில் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் பொருட்டுப் புதிய அலுவலகத்தைத் துவங்கியுள்ளது.

கொரோனா

கொரோனா

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் அதிகப்படியான அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைந்த நிலையில் அலுவலகக் குத்தகை ஒப்பந்தங்கள் அதிகரித்து வருகிறது. இதில் புதிய அலுவலகங்களை அமைக்கும் பெரு நகரங்களில் சென்னை முக்கிய நகரமாக மாறியுள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

சமீபத்தில் சென்னையில் அமேசான், Ally போன்ற பல முனனணி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து அலுவலகத்தை அமைத்து வரும் காரணத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tech companies lead in office space leasing in Chennai

Tech companies lead in office space leasing in Chennai குட் நியூஸ்.. சென்னையைத் தேடி வரும் டெக் நிறுவனங்கள்..!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.