கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும்.
அதன்பின்னரே, அவர்கள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து, தேவையும் குறைந்ததால், இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்வதற்கான விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.
இதேபோன்று, வருகிற 19 மற்றும் 23ந் தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பும் விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது.