கான்பூர்: கொரோனா பரவல் அதிகரிப்பால் நான்காவது அலை உருவாக வாய்ப்பு இல்லை என்று கான்பூர் ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கைக 4,30,42,097 ஆக உள்ளது. ெகாரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,542 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 214 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா உயிரிழப்பு 5,21,965 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,985 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,25,10,773 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,66,459 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் 186.54 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 2,61,440 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 83.21 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 பேரும், நேற்று 1,109 பேரும் கொரோனாவால் பாதித்த நிலையில் இன்று 1,150 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, கேரளாவில் தினசரி கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் நான்காவது அலை உருவாக வாய்ப்பு இல்லை என்று கான்பூர் ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று கவனக்குறைவாக இருப்பதே தொற்று பரவலுக்கு காரணம் என்றும் அறிவித்துள்ளது.