சர்வதேச சந்தையில் காலையில் இறங்கு முகமாக இருந்த கச்சா எண்ணெய் விலை மாலையில் உயரத் தொடங்கி உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக வந்த தகவலால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112.68 டாலராக உயர்ந்துள்ளது.