சாஃப்ட் இட்லி வேணுமா? ஒரு வாரம் வரை மாவு ஃப்ரஷா வைக்க இதுதான் வழி!

இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது பெரும்பாலும் வீட்டில் மொத்தமாக அரைத்து வைத்து விடுவோம்.

அப்படி அரைக்கும் பொழுது அதிகபட்சம் மூன்று நாள் வரை மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும். நான்காவது நாள் கட்டாயம் எல்லோருக்கும் மாவு புளித்து விடும்.

இட்லி தோசைக்கு அரைக்கும் மாவு ஒரு வாரம் ஆனாலும் கொஞ்சம் கூட புளிக்கவே கூடாது என்றால் இந்த மாறி டிரை பண்ணலாம்.

இட்லி தோசைக்கு அரைக்க அரிசியை அதிகம் ஊற வைக்கக் கூடாது. அதிகபட்சம் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும்.

அதற்கு மேல் ஊற வைத்தால் மாவு வேகமாக புளிக்க வாய்ப்பு அதிகம். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்தாலே போதும் நன்கு ஊறி விடும். மாவு அரைக்கும் பொழுது நீண்ட நேரம் அரைக்கக் கூடாது.

மாவு அதிக நேரம் அரைபடும் பொழுது கிரைண்டர் சூடாகி அதிலேயே மாவு வேகமாக புளிக்கும். இதனால் மாவு அரைக்கும் பொழுது ஐஸ் வாட்டர் பயன்படுத்தி அரைப்பது நல்ல ஐடியாவாக இருக்கும்.
முதலில் உளுந்தை போட்டு ஆட்டும் பொழுது சிறிதளவு ஐஸ் வாட்டரை ஊற்றி விட்டு பின்னர் உளுந்தை போட வேண்டும்.

உளுந்து நன்கு பொங்க பொங்க ஆட்ட தண்ணீரை இடையிடையே ஜில்லென்று தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சுடச்சுட பீட்ரூட் பஜ்ஜி… சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

இப்படி ஆட்டினால் உபரி அதிகமாக கிடைக்கும். உளுந்து அரைபட அதிகபட்சம் 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் போதும். அரைக்கும் பொழுது இடை இடையே தள்ளி விடுவதற்கு கைகளை பயன்படுத்தாமல் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பின்னர் உளுந்தை தனியே எடுத்து விட்டு அரிசியை போடும் முன் ஐஸ் வாட்டரை சிறிதளவு தெளித்து விட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை போட்டு அரையவிட வேண்டும்.

அரிசி அரைபட 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை போதும். ரிசி அரைபட்டு முடிந்ததும் எடுத்து வைத்துள்ள உளுந்தை அதில் சேர்த்து கிரைண்டரிலேயே கலந்து விடுங்கள்.

அரிசியும், உளுந்தும் சேர்ந்து கிரைண்டரில் இறுதியாக கலந்த பின்னர் எடுத்து பாத்திரத்திற்கு மாற்றுங்கள்.

இப்படி கலக்கும் பொழுது அதில் உப்பு சேர்த்து விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
மாவை பாத்திரத்திற்கு மாற்றிய பின் கைகளை பயன்படுத்தாமல் தேவையான அளவிற்கு இட்லிக்கு மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு மீதம் இருக்கும் மாவை உப்பு போடாமல் அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இட்லிக்கு பாத்திரத்தில் மாற்றிய மாவில் மட்டும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து வெளியில் வைத்து விடுங்கள்.

நீங்கள் வெளியில் 3 மணி நேரம் வைத்திருந்தால் போதும், அதன் பிறகு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடுங்கள்.

இப்படி செய்யும் பொழுது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.