சிப்காட் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதற்கான நிலத்தை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
மேல் செங்கத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கக்கோரிய செங்கம் எம்.எல்.ஏ. கிரி, அங்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதனை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தியதை அடுத்து, வனத்துறை வசம் சென்றதாகவும், தற்போது அந்நிலம் யாரிடம் உள்ளது? என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, நிலம் இருந்தால் சிப்காட் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றார். மேலும், தனது வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிக்க செல்வது சிரமமான காரியம், என்பதால், அந்த துப்பறியும் வேலையை எம்.எல்.ஏ.வே மேற்கொண்டு நிலத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றார்.