ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஐபோன் எஸ்இ 2022 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதுமட்டும் இல்லாமல், ஐபோன் 13 போனின் பச்சை நிறப் பதிப்பையும் அறிமுகம் செய்தது. இந்த சூழலில், ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் புதிய
ஐபோன் 14
தொகுப்பு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த தொகுப்பில் ஐபோன் மினி வேரியன்ட் இருக்காது என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல்களின்படி, நிறுவனம் வேறெந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லாத புதிய அம்சத்தை புதிய ஐபோன் 14 ஸ்மார்ட்போன்களின் நிறுவ உள்ளதாகக் கூறப்படுகிறது. இம்முறை ஆப்பிள் நிறுவனம் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி உள்ளது.
ஆம், அவசர காலத்தில் உங்களுக்கு இந்த அம்சம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சரியாக நெட்வெர்க் கிடைப்பதில்லை. இதுபோன்ற இடங்களில் அவசர காலங்களில் மாட்டிக் கொண்டால், செய்வதறியாமல் பயனர்கள் திகைத்து நிற்பர்.
ஒன்பிளஸ், ரெட்மி என இந்த மாதம் வெளியாக காத்திருக்கும் போன்கள்!
சேட்டிலைட் மெசேஜிங் அம்சம்
இந்த குறையை போக்க ஆப்பிள் நிறுவனம், புதிய சேட்டிலைட் மெசேஜிங் அம்சத்தை புதிய ஐபோன் 14 தொகுப்பில் வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அம்சமானது, சிம் கார்டின் அணுகல் இல்லாமல், அவசர காலத்தில் பயனர்களை குறுந்தகவல் அனுப்ப அனுமதிக்கும்.
புதிய
ஆப்பிள் ஐபோன்
14 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்களுக்கு சோகமாக செய்தி என்னவென்றால், வரவிருக்கும் ஐபோன் தொகுப்பில் மினி வேரியன்ட் இடம்பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது.
ஸ்டிக்கரை மாற்றி ஒப்போ போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறதா ஒன்பிளஸ்!
ஐபோன் 14 அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன்கள் A16 Bionic சிப்செட் கொண்டு இயக்கப்படும். ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்படும் சிப்செட்டுகள் A16 Pro Bionic என்று அழைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் புதிய எல்ஜி OLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 14 தொகுப்பு நான்கு மாடல்களைக் கொண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ் (Apple iPhone 14 Max), ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 14 Pro Max) ஆகிய நான்கு மாடல்கள் இதில் அடங்கும். ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 14 சீரிஸ் (Apple iPhone 14 Series) இந்த ஆண்டின் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தள்ளுபடி விலையில் ரியல்மி புக் பிரைம் லேப்டாப் விற்பனை தொடக்கம்!
ஐபோன் 14 எதிர்பார்க்கப்படும் விலை
ஐபோன் 14 ப்ரோ தொடக்க விலை இந்திய மதிப்பில் ரூ.83,000 ஆக இருக்கலாம் என்றும், ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத பதிப்பின் விலைக்கு இடையே ரூ.15,000 வித்தியாசம் இருக்கும் என்றும் அந்த வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கிடைத்த தகவல்களின் படி, புதிய ஐபோன் ஸ்மார்ட்போன் தொகுப்பில் iPhone 14 மலிவான மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. காரணம் புதிய தொகுப்பில் ஆப்பிள் நிறுவனம் மினி மாடலை நிறுத்தியுள்ளது. iPhone 13-ஐப் போலவே ஐபோன் 14 சுமார் ரூ.60.000 ஆக இருக்கும்.
ஐபோன் மினி மாடல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இதற்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 14 மேக்ஸ் மாடலை அறிமுகப்படுத்துகிறது.
வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!
ஐபோன் 15 குறித்து வெளியான தகவல்கள்
அடுத்த 2023 ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் குறித்தும் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது. இது, கேமராவை பிரதான அம்சமாக மனதில் வைத்திருக்கும் பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 15 தொகுப்பில் புதிய கேமராவை அறிமுகம் செய்ய உள்ளது.
ஐபோன் 15 மாடலில், இதுவரை சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களிலும் மட்டுமே இருந்த, பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா லென்ஸ் புதிய ஆப்பிள் வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் ஜாஹ்வா எலெக்ட்ரானிக்ஸ் எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.