பீஜிங், : இந்தாண்டு ஜன., – மார்ச் வரையிலான முதல் காலாண்டில், சீனாவின் பொருளாதாரம், 4.8 சதவீதமாக மிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய காலாண்டில், 4 சதவீதமாக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க, ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், சீனாவின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
எனினும், இது உத்தேச மதிப்பீடான, 5.5 சதவீதத்தை விட குறைவாகும். சீன அரசு, கொரோனா வால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீர் செய்யும் நோக்கில், தொழில் துறையினர் செலுத்திய வரியை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், அவர்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டின் முதல் காலாண்டில், சில்லரை விற்பனை 3.3 சதவீதமாக மிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.
பீஜிங், : இந்தாண்டு ஜன., – மார்ச் வரையிலான முதல் காலாண்டில், சீனாவின் பொருளாதாரம், 4.8 சதவீதமாக மிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய காலாண்டில், 4 சதவீதமாக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.