ஜம்மு காஷ்மீரில் கடந்த ஓராண்டில் 52 ஆயிரத்து 155 கோடி ரூபாய் தொழில் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
இதன்மூலம் 2 இலட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் நீக்கப்பட்டதால் அங்குப் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவும், தொழில் தொடங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் பெறப்பட்ட முன்மொழிவுகளில் 36 ஆயிரத்து 244 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளித்த திட்டங்களில் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் நாலாயிரத்து 878 ஏக்கர் நிலம் கோரியிருந்த நிலையில், இரண்டாயிரத்து 246 ஏக்கர் நிலம் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.