இந்திய வர்த்தகச் சந்தை ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த நாளில் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளையும், வருவாய் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையும் வண்ணம் பல முயற்சிகள் எடுக்கப்பட உள்ள நிலையில், தற்போது முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்
5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்?

3%, 8% வரி
மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் மே மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி பலகையை நீக்கிவிட்டு, சாமானிய மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களை 3 சதவீத அடுக்குக்கும், மீதமுள்ளவை 8 சதவீத வகைகளுக்கும் மாற்ற திட்டமிட்டு உள்ளது.

50000 கோடி ரூபாய்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 1 சதவீத உயர்வு மூலம் வருடத்திற்குச் சுமார் 50000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் வரி மாற்றத்தின் மூலம் மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகைக்காக மத்திய அரசை நம்பி இருக்கத் தேவையில்லை. ஆனால் இந்தப் புதிய வரி விதிப்பு மூலம் பல பிரச்சனைகளும், பாதிப்புகளும் உள்ளது.

ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 0 மற்றும் 5 சதவீத விரி விதிப்பில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் சேவைகள், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்படத் திட்டமிட்டு உள்ள வரி மாற்றம் மூலம் சில பொருட்களின் விலை குறைந்தாலும், சில பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

பிரிப்பு
இதேவேளையில் 5 சதவீத பிரிவில் இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் எத்தனை சதவீதம் 3 சதவீதத்திற்கும், எத்தனை சதவீதம் 8 சதவீதத்திற்கும் மாற்றப்படுகிறது என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

சாமானிய மற்றும் நடுத்தர மக்கள்
காரணம் 3 சதவீத பிரிவில் 20 -30 சதவீத பொருட்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 80-70 சதவீத பொருட்களை 8 சதவீதத்திற்குக் கீழ் மறுசீரமைப்பு செய்தால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள்
ஆனால் இந்த வரி மாற்றத்தின் மூலம் மத்திய அரசு பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மீதான வரி விதிப்பு வித்தியாசத்தைக் கட்டாயம் சரி செய்யும். இப்பிரிவு வரி விதிப்பில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இப்புதிய மாற்றம் இதற்கான தீர்வு காணப்படும். உதாரணமாகப் புரோட்டா, வாழக்காய் சிப்ஸ், போன்ற பொருட்கள்..

வரிப் பலகை பிரச்சனை
அனைத்திற்கும் மேலாக ஏற்கனவே வர்த்தகச் சந்தை 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புகள் (5, 12, 18, 28) மூலம் வர்த்தகச் சந்தையில் ஏற்கனவே அதிகப்படியான குழப்பங்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஒரு வரிப் பலகை (3, 8, 12, 18, 28) கொண்டு வருவதன் மூலம் கூடுதலான சுமை உருவாகும்.
GST council: planning to restructure 5 percent slab into 3 and 8 Percent slab; How does it impact people?
GST council: planning to restructure 5 percent slab into 3 and 8 Percent slab; How does it impact people? ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!