நாட்டின் டாடா ஸ்டீல் ஷேர் பிரைஸ்டின் முன்னணி வணிக குழுமமான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த பங்கின் விலையானது மே 3 அன்று பங்கு பிரித்தல் மற்றும் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லார்ஜ் கேப் நிறுவனமான இது வாடிக்கையாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, விரைவில் அறிவிப்பினை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பிரம்மாண்ட திட்டம் நிறைவு.. டாடா ரியால்டி-யின் சூப்பர் அறிவிப்பு..!
பங்கு பிரித்தல் (STOCK SPLIT) என்றால் என்ன?
பங்கு சந்தையில் ஸ்டாக் ஸ்பிளிட் என்பது பங்கு பிளவு ஆகும். இது ஒரு நிறுவனத்தின் பங்கு விலையானது மிக விலை உயர்ந்ததாக இருக்கும்போது சிறிய முதலீட்டாளர்களின் பங்கீடு குறையும். ஏன் முதலீடு செய்ய முடியாமல் கூட போகலாம். அத்தகைய சூழ்நிலைகளில் நிறுவனம் தனது பங்குகளில் சிறு முதலீட்டாளர்களை கவர பங்கு பிரித்தல் என்ற ஸ்டாக் ஸ்பிளிட்டை செய்கிறது. இதன் காரணமாக பங்கு விலை குறையும். இது பலரையும் வாங்க தூண்டும்.
டெக்கனிக்கலாக எப்படியுள்ளது?
இப்பங்கின் விலையானது டெக்னிக்கலானது 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கும் மேலாகவும், இதே 5 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கும் கீழாகவும் வர்த்தகமாகி வருகிறது. ஆக நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டு நிலவரம்?
இப்பங்கின் விலையானது ஓராண்டில் 49.48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 20% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பிஎஸ்இ-யில் மொத்தம் 1.03 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மதிப்பு 13.85 கோடி ரூபாயாகும். இதன் சந்தை மூலதனம் பிஎஸ்இ-யில் 1.64 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மலிவு விலையில் கிடைக்கும்
பங்கு பிரிப்பானது இந்த நிறுவனத்தின் பங்குகளின் பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு பங்கு விலை மலிவு விலையில் கிடைக்க வழிவகுக்கிறது. ஆக மே 3ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
டாடா ஸ்டீலின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் தற்போது 1.13% அதிகரித்து, 1334.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை இதுவரையில் 1358.05 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1328.85 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1534.50 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 860 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் 1.25% அதிகரித்து, 1336 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 1358.45 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1329 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1534.60 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 854.90 ரூபாயாகும்.
Tata steel shares rise after 3 sessions on stock split plan
Tata steel shares rise after 3 sessions on stock split plan/டாடா ஸ்டீலின் சூப்பர் முடிவு.. எகிறி வரும் பங்கு விலை.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்!