ராணுவ உயர் அதிகாரிகள் 5 நாள் மாநாடு, டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்கும் மாநாட்டுக்கு ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமை தாங்குகிறார். அவர் இம்மாதம் ஓய்வு பெறுவதால், அவர் பங்கேற்கும் கடைசி மாநாடு இதுவே ஆகும். இந்த மாநாட்டில், சீனாவுடனான 3 ஆயிரத்து 400 கி.மீ. நீள எல்லை கோட்டு பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
காஷ்மீர் நிலவரம், பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படுகிறது. ரஷியா-உக்ரைன் போர் குறித்தும், ஆலோசிக்கப்படுகிறது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில், நாட்டின் பாதுகாப்புக்கான சவால்கள் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.