மும்பை: ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி கேப்பிடஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், அணியின் உடற்பயிற்சியாளர் பாட்ரிக் ஃபர்ஹாட் மற்றும் அணியின் மற்றொரு வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஒட்டுமொத்த டெல்லி அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த போட்டி நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால்தான் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா சோதனை, தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு சோதனைகள் மற்றம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல் அணியின் பிசியோ பயிற்சியாளர் பேட்ரிக் ஃபார்ஹார்ட்-க்கு கடந்த 15ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ரேபிட் ஆன்டிஜென் சோதனையில், அயல்நாட்டு வீரர உள்பட மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று முடிவு வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் வீரர்களிடையே கைகுலுக்கல் போன்ற நடவடிக்கைகள் வேண்டாம் என்றும் சமூக-இடைவெளியைப் பராமரிக்க ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக டெல்லி அணியில் உள்ள அனைத்து நபர்களுக்கும் இன்றும் நாளையும் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு புனே செல்ல வேண்டாம் என்று டெல்லி அணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அணி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வரும் புதன்கிழமை MCA ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டமும் கேன்சலாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.