தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: அரியானா அணி சாம்பியன்..!

போபால்,
12-வது தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி மத்திய பிரதேச
மாநிலம் போபாலில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – அரியானா அணிகள் மோதின. 
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் அரியானா 3-1 என்ற கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 

2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்ற தமிழக அணி வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பாராட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.