வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களில் நெல்லிக்காய்க்கு இரண்டாவது இடம்! ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை ஒப்பிடும்போது அதிக புரதச் சத்தும், மிக அதிகமான வைட்டமின் சி சத்தும் நெல்லிக்காயில்தான் இருக்கின்றன தெரியுமா? அதிக வைட்டமின் சி இருப்பதனால், நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. உடல் சோர்வை நீக்கி, மந்தமான தன்மையை போக்குகிறது.
சளி, இருமல், காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது நெல்லி. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நெல்லியின் பலன்கள் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது.
இந்தப் பலன்களை அறிந்த பின் நெல்லி சாப்பிடாமல் இருக்கலாமா?
* வைட்டமின் சி சத்து ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, திசுக்களுக்கு புத்துணர்வு தருகிறது.
* கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது – கண் தசையை வலுப்படுத்துவதன் மூலம், கண் புரை நோயைத் தடுக்கிறது.
* வைட்டமின் சி குறைபாடு, ஸ்கர்வி எனப்படும் நோய்க்கு வழிவகுக்கிறது. உடல் சோர்வு, ரத்த சோகை இந்நோயின் அறிகுறிகளாகும். ஸ்கர்வியை குணமாக்க வல்லது நெல்லி.
* நெல்லிக்காயில் உள்ள பாஸ்பரஸ், எலும்புகளை வலுவாக்கவும் அமினோ அமிலங்களை ஒருங்கிணைப்பதிலும் உதவுகிறது. மேலும், நரம்பியக்கடத்திகளின் சரியான செயல்பாட்டிற்கு பாஸ்பரஸ் தேவைப்படுகிறது.
* இதிலுள்ள இரும்புச் சத்து ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் உதவுகிறது. இதனால் மாதவிடாய் தொடர்பான வலி குறைகிறது.
* நெல்லிக்காயில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கக் கூடியது.
* இதிலுள்ள டானின் என்ற அமிலம் வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராட உதவுகிறது.
* முடியின் வேர்களைப் பலப்படுத்தி, அதன் நிறத்தையும் பளபளப்பையும் பராமரிக்கிறது.
* ஆண்கள் உணவில் நெல்லிக்காயை சேர்ந்து வந்தால் ஹார்மோன் அளவை சீர் செய்து, தாம்பத்தியத்தில் சிறக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
* நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. மலச்சிக்கல் தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
இவ்வளவு நற்குணங்கள் இருப்பதால்தான் நெல்லியை முதுமையைத் தள்ளிப்போடும் கனி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
தேனின் நற்குணங்கள்…
ஆயுர்வேதத்தின்படி, பலவிதமான என்சைம்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கி உயிரை நிலைநிறுத்தத் தேவையான அனைத்து பொருட்களையும் கொண்ட ஒரே உணவு தேனாகும்.
தேனில் மட்டுமே மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் பினோசெம்ப்ரின் என்ற ஆக்ஸிஜனேற்றி காணப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலை அழற்சியிலிருந்து பாதுகாக்கின்றன. பாரம்பரிய வைத்தியத்தில் இருமலின்போது ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல மருந்துகளை தேனில் குழைத்து உண்பதால் முழு பலன்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தேன் நெல்லி…
புகைப் பிடிக்கும் நபர்களுக்கு கூடுதலாக 35 மில்லி கிராம் வைட்டமின் சி தேவைப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடித்தல் ஃப்ரீ ரேடிக்கல் எனும் நச்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனை சரிக்கட்ட நெல்லிக்காய் மற்றும் தேன் பெரிதளவில் உதவுகின்றன.
பொதுவாக பழங்கள் எளிதில் கெட்டுவிடும் தன்மை கொண்டவை. தேனோ முறையாக அடைத்து வைத்தால் கெடாது. அதனால்தான் உலர் பழங்களைப் பதப்படுத்த தேன் பயன்படுகிறது. நெல்லியைத் தேனில் ஊறவைத்து பதப்படுத்தும்போது நெல்லியின் முழுப் பலன்கள் மட்டுமல்லாது தேனின் நற்குணங்களும் நமக்குக் கிடைக்கின்றன.
சாரல் வழங்கும் இயற்கை உணவுகள்…
இயற்கையான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எந்தவிதக் கலப்படமும் இன்றி முறையாகப் பதப்படுத்தி வழங்கி வருகிறது சாரல் நிறுவனம். சத்துமிக்க நம் பாரம்பரிய உணவுகளை சுலபமான முறையில் பேக் செய்து தருகிறது. திடகாத்திரமான உடலும், வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமும் வேண்டும் என்று விரும்பும் யாவருக்கும் சிறந்த தேர்வு சாரல் வழங்கும் இயற்கை உணவுகள்.
சிறந்த நெல்லிக்காய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அசல் தேனில் ஊற வைத்து பேக் செய்து வழங்குகிறது சாரல். சுவையான தேன் நெல்லியை இனி ஆண்டு முழுக்க உண்டு மகிழலாம். என்றும் ஆரோக்கியத்துடனும் இளமையுடனும் இருக்கலாம்!
விகடன் வாசகர்களுக்காக சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது சாரல். நீங்கள் சாரலில் வாங்கும் அனைத்து உணவுப் பொருள்களுக்கும் இப்போது 30% தள்ளுபடி உண்டு. V30 – எனும் டிஸ்கவுன்ட் கோடு பயன்படுத்தி இந்தத் தள்ளுபடியைப் பெற்றிடுங்கள்!
இப்போதே வாங்க: https://saaralfoods.com/