நட்ராஜ் நடிப்பில் உருவாகும் பகாசூரன் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியிடு…!

செல்வராகவன்
மற்றும் இயக்குனர்
மோகன் ஜி
கூட்டணியில் உருவாகும் ‘
பகாசூரன்
’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.திரௌபதி,
ருத்ரதாண்டவம்
ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மோகன் ஜி. இவரின் அடுத்த படைப்பாக உருவாகும் திரைப்படம் ‘பகாசூரன்’.

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். அதோடு நடிகர்
நட்ராஜ்
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மோகன் ஜியின்
ஜிஎம் பிலிம்
கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கணவருடன் பீச்சில் ஈஸ்டரை கொண்டாடிய பிரபல நடிகை… ‘அவரை’ பற்றி விசாரித்த ரசிகாஸ்!

சமீபத்தில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பூஜையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. இந்த படம் மோகன் ஜியின் வழக்கமான படமா அல்லது வேறு விதமான கதையாக என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக மோகன் ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல் காட்சியில் நடிகர் நட்ராஜ் இருப்பதுபோன்று புகைப்படம் ஒன்றும் வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.