நிமிடங்களில் ரூ.40,000 கோடியை இழந்த முதலீட்டாளார்கள்.. இன்ஃபோசிஸ் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயமாக இருந்தாலும், இன்று காலை முதல் கொண்டு பலத்த ஏற்ற இற்ககம் இருந்து வருகின்றது. குறிப்பாக இன்று காலை தொடக்க முதல் கொண்டே சந்தையானது பலத்த சரிவிலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிந்து காணப்படுகின்றது.

இதற்கிடையில் இன்று முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 7% மேலாக சரிந்து காணப்படுகின்றது.

ரூ.47907 கோடி இழப்பு.. முதலீட்டாளர்களைக் கதறவிட்ட இன்போசிஸ்..!

தற்போதைய பங்கு நிலவரம்?

தற்போதைய பங்கு நிலவரம்?

இன்ஃபோசிஸ் பங்கு விலையானது என் எஸ் இ-யில் தற்போது 7.08% குறைந்து, 1625.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 1650 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1590 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1953.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 1311.30 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் 7.13% குறைந்து, 1624 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 1650.90 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1592.05 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1953.70 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 1311.80 ரூபாயாகும்.

இவ்வளவு இழப்பா?

இவ்வளவு இழப்பா?

இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பினை விட குறைந்த நிலையில், பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இதன் சந்தை மூலதனமானது காலை நிலவரப்படி 6,92,281 கோடி ரூபாயாக பி எஸ் இ-யில் குறைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளார்களுக்கு 40,000 கோடி ரூபாய் இன்று காலை நிலவரப்படி இழப்பினை கண்டுள்ளனர்.

லாபம் அதிகரிப்பு தான்
 

லாபம் அதிகரிப்பு தான்

இதற்கிடையில் இன்று நிஃப்டி ஐடி மற்றும் பிஎஸ்இ டெக் குறியீடுகள் 4% மேலாக சரிவினைக் கண்டுள்ளன.

எனினும் இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 12% அதிகரித்து, 5686 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 5076 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வருவாய் விகிதம் 23% அதிகரித்து, 32,276 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 26,311 கோடி ரூபாயாக இருந்தது.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் -ன் மார்ஜின் குறைந்த செயல்பாடு, வாடிக்கையாளார்கள் ஒப்பந்தங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செலவுகள் ஆகியவற்றின் தாக்கத்தால் மோசமாக காணப்பட்டது.

இதற்கிடையில் பயணம், வசதிகள், தகவல் தொடர்ந்து செலவுகாள், சம்பள திருத்தம், ஊழியர்களின் பயன்பாட்டு விகிதம் உள்ளிட்ட பலவும் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தொடர்ந்து சந்தையில் தேவை அதிகம் உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் வருவாய் 13 – 15% இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இதற்கிடையில் இதன் செயல்பாட்டு மார்ஜின் அளவு 21 – 23% இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் இலக்கு விலையானது 2426 ரூபாயாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

infosys investors lose over Rs.40,000 crore amid shares fall today

infosys investors lose over Rs.40,000 crore amid shares fall today/நிமிடங்களில் ரூ.40,000 கோடியை இழந்த முதலீட்டாளார்கள்.. இன்ஃபோசிஸ் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Story first published: Monday, April 18, 2022, 13:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.