இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கவுசல் சில்வா தனது 8ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில் மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் கவுசல் சில்வா.
இவருக்கும் நடிகை பாக்யா ஹெட்டியாரச்சிச்சி என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சில்வா – பாக்யா தம்பதி இன்று தங்களது 8ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
I’m truly blessed and grateful to have someone like you to hold hands for the rest of my life. It’s been such a wonderful 8 years and I’m so much thankful for the love,care and support you have given to me. Happy Anniversary my love. ❤️🌹@bhettiarachchi8 pic.twitter.com/pFtSJQ6zhg
— Kaushal (@SilvaKaushal) April 18, 2022
இதையடுத்து சில்வா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உன்னை போன்ற ஒருவர் வாழ்நாள் முழுவதும் என் கைகோர்த்துக் கொண்டிருப்பதற்காக நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்படுகிறேன்.
இது மிகவும் அற்புதமான 8 ஆண்டுகள் மற்றும் நீ எனக்கு அளித்த அன்பு, கவனிப்பு மற்றும் ஆதரவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இனிய திருமணநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.