புதுடில்லி-பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக வரும், 21ல் இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து அவர் விரிவாக விவாதிக்க உள்ளதாக, பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
பயணம் ரத்துஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்ற பின், கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு முறை அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும், 21ல் முதல்முறையாக ஜான்சன் இந்தியா வருகிறார். நேரடியாக குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வரும் போரிஸ் ஜான்சன், அங்கு தொழிலதிபர்களை சந்திக்கிறார்.அப்போது பிரிட்டன் மற்றும் இந்தியாவில் பல்வேறு தொழில் முதலீடுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் 22ல் டில்லி வரும் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இரு நாட்டுக்கு இடையிலான தாராள, துாதரக மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். இரு நாட்டுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சை, அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல இந்த இந்திய பயணத்தை, ஒரு வாய்ப்பாக போரிஸ் ஜான்சன் பயன்படுத்திக் கொள்வார் என, இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்
.இந்திய பயணம் குறித்து போரிஸ் ஜான்சன் கூறியதாவது:என் இந்திய பயணம் இரு நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.வேலை வாயப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்படும்.கட்டாயம்நம் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருக்கும்
இந்த நேரத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடுகள் ஒன்றாக சேர வேண்டிய கட்டாயம் உள்ளது. இது போன்ற நிச்சயமற்ற நேரங்களில் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் பெரிய ஜனநாயக நாடாகவும் விளங்கும் இந்தியாவின் உறவு பிரிட்டனுக்கு தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement