‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘
பீஸ்ட்
‘ படத்தில் நடித்தார்
விஜய்
. கோலிவுட் வட்டாராமே எதிர்பார்த்து கொண்டிருந்த ‘பீஸ்ட்’ படம் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ்
தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியான ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தாலும் பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. நெல்சன் திரைக்கதை அமைப்பில் சொதப்பி விட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
‘இந்தி தெரியாது போடாக்கு’ பிறகு யுவனின் தரமான சம்பவம்: வைரலாகும் போட்டோ..!
இந்த நிலையில் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் ‘பீஸ்ட்’ படத்தை பற்றி கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்துல எல்லாரும் இருக்காங்க ஆனால் திரைக்கதை தான் இல்லை. விஜயை மட்டுமே நம்பி படம் எடுத்தது போல உள்ளது என்று கூறியுள்ளார். இளம் இயக்குநர்கள் பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் சொதப்பி விடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இளம் இயக்குனர்களுக்கு முதல் படம் ஹிட்டடித்தால் அவர்களுக்கு முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர். இதனால் அவர்கள் என்ன மாதிரியான படத்தை இயக்கினாலும் அது சம்பந்தப்பட்ட அந்த நடிகருக்காகவே நன்றாக ஓடி கோடிக்கணக்கில் வசூல் செய்து விடும் என கூறியுள்ளார். ‘பீஸ்ட்’ படம் விஜய்க்காக ஓடியதாக அவர்
எஸ்.ஏ. சந்திரசேகர்
மறைமுகமாக தெரிவித்துள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜய்க்காக பீஸ்ட்; இது ஒன் மேன் ஷோ!