மாதவம் செய்த மாதவன்… நீச்சலில் தங்கம் வென்ற மகன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோபன்ஹேகன்: டென்மார்க் நீச்சல் போட்டியில் இந்தியாவின் வேதாந்த் (800 மீ., ‘பிரீஸ்டைல்’) தங்கம் வென்றார்.

latest tamil news

டென்மார்க்கில், சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 800 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவு போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் 16, பங்கேற்றார். பந்தய துாரத்தை 8 நிமிடம், 17.28 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த வேதாந்த், தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது பதக்கம். ஏற்கனவே 1500 மீ., ‘பிரீஸ்டைல்’ போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், 200 மீ., ‘பிரீஸ்டைல்’ போட்டியில் 12வது இடம் பிடித்திருந்தார்.

latest tamil news

ஆண்களுக்கான 100 மீ., ‘பட்டர்பிளை’, ‘ஏ’ பிரிவு பைனலில் இலக்கை 54.24 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், 5வது இடம் பிடித்தார். இவர், இத்தொடரின் 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் தனிஷ் ஜார்ஜ் மாத்யூ, ‘சி’ பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 56.44 வினாடியில் கடந்து, முதலிடம் பிடித்தார்.

பெண்களுக்கான 200 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில் இலக்கை 2 நிமிடம், 14.27 வினாடியில் கடந்த இந்தியாவின் ஷக்தி பாலகிருஷ்ணன், 34வது இடத்தை கைப்பற்றினார்.இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கம் கிடைத்துள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.